ETV Bharat / state

“23 ஆண்டுகளாக ஒலிக்கும் எம்.ஜி.ஆர்., பாடல்”- கடலை வியாபாரியின் கதை!

author img

By

Published : Oct 17, 2020, 6:32 PM IST

தருமபுரி: 23 ஆண்டுகளாக எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்கவிட்டு தீவிர ரசிகர் ஒருவர் கடலை பொரி வியாபாரம் செய்து வருகிறார்.

die-hard-fan-remembering-the-legacy-of-mgr
எம்ஜிஆர் ரசிகனின் செயல்

எம்ஜிஆரின் மீதிருக்கும் பற்று காரணமாக தருமபுரி மாவட்டம் ஏ.கொல்ல அள்ளி வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (72) தனது சைக்கிளை எம்ஜிஆரின் ரதம் போல வடிவமைத்து அதில் கடலை பொரி வியாபாரம் செய்து வருகிறார்.

காலை ஏழு மணிக்கு எம்ஜிஆரின் பாடல்களில் தத்துவம் மிகுந்த பாடல்களை ஒலிக்கவிட்டு வியாபாரத்தைத் தொடங்கும் இவர் இரவு 10 மணி வரை இயங்குகிறார். ஒரு வாரத்திற்கு நான்கு நாள்கள் பணி. தெருத்தெருவாக எம்ஜிஆர் பாடல்களுடன் செல்வதே தனிப்பெருமை எனத் தெரிவிக்கிறார் மாரிமுத்து.

இவரின் வாகனம் வந்தாலேயே அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு கொண்டாட்டம் தான். எம்ஜிஆர் பாடலை கேட்டுக் கொண்டே இவரிடம் பொரிக்கடலை வாங்க பெரிய வாடிக்கையாளர் பட்டாளமே உண்டு.

மாரிமுத்துவை பற்றி..

எம்ஜிஆரின் தீவிர ரசிகர். மாரிமுத்துவிற்கு நடிகர் எம்ஜிஆரை இரண்டு முறை தூரமாக நின்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

கடந்த 1967ஆம் ஆண்டு தருமபுரிக்கு எம்ஜிஆர் வரும்போதும், சென்னையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் அவரைப் பார்த்ததாக மாரிமுத்து தனது பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

சைக்கிளில் முதல்முறையாக தான் வியாபாரத்தைத் தொடங்கும் போதிலிருந்தே எம்ஜிஆர் பாடல்களை ஒலிக்கவிடுவாராம். அவர் இந்த வியாபாரத்தைத் தொடங்கி 23 ஆண்டுகளாகிவிட்டன.

ஆனால் இன்றும் அவரது வருகையை எம்ஜிஆரின் பாடல்கள் தான் சமிக்ஞை (signal) செய்கின்றன. இவர் எம்ஜிஆர் ரசிகர், என்பதால் பிற கட்சியினர் பொரி வாங்கத் தயங்குவதில்லை என இன்முகமாகத் தெரிவிக்கும் மாரிமுத்து, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினரிடம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக மனு அளித்ததாகக் கூறினார்.

எம்ஜிஆர் ரசிகனின் செயல்

எந்நிலையிலும் ஒரு எம்ஜிஆர் ரசிகனாகவே இருக்கும் மாரிமுத்துவிற்கு, அவர்(எம்ஜிஆர்) கொள்களைப் பின்பற்றும் கட்சியினர் உதவ வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இதையும் படிங்க:யூ-ட்யூப் தளத்தில் சாதனை படைத்த சிவகார்த்திகேயன் பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.