ETV Bharat / state

சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீர்: தருமபுரி எம்.பி ஆய்வு

தருமபுரி: சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கும் பிரச்னையை தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பார்வையிட்டார்.

author img

By

Published : Oct 13, 2019, 5:24 PM IST

dharmapuri

தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் நகரப் பகுதிக்கு வருவதற்கும், செல்வதற்கும் ஒரு பாதை மட்டுமே உள்ளது. இந்த பாதையும் ரயில் சுரங்கப் பாதையாக இருக்கிறது. மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி முதல் 6 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி பொதுமக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரிடம் சுரங்கப்பாதை பகுதியைச் சீர்செய்து தரும்படி கோரிக்கைவைத்தனர்.

ரயில் சுரங்கப்பாதையை பார்வையிட்ட எம்.பி செந்தில்குமார் இந்த விவகாரம் குறித்து ரயில் நிலைய அலுவலர்களுக்கு கடிதம் எழுதியதையடுத்து தற்போது இப்பகுதியில் சுரங்கப்பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மழைநீர் பாதையில் தேங்கி நிற்காமல் வெளியேற வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

திமுக எம்.பி. செந்தில்குமார் ஆய்வு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்பி செந்தில்குமார், ‘இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அலுவலர்களுக்கு கடிதம் எழுதினேன். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலையை சீரமைத்து வருகின்றனர். மழைநீர் தேங்காத வகையிலும் கழிவுநீர் கலக்காத வகையிலும் நிரந்தர மின்மோட்டார் அமைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குளத்தில் கலக்கும் கழிவுநீர், கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்!

Intro:tn_dpi_01_dmk_mp_visit_vis_7204444

Body:

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தருமபுரி திமுக எம் பி செந்தில்குமார். தருமபுரி நகரப்பகுதி எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 2000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இம்மக்களுக்கு தருமபுரி நகர பகுதிக்கு வருவதற்கும் செல்வதற்கும் ஒரு பாதை மட்டுமே உள்ளது இப்பாதை ரயில் சுரங்கப் பாதையாக இருக்கிறது.மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி முதல் 6 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்று பொது மக்களின் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படுகிறது.இப்பகுதி பொதுமக்கள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம்  சுரங்கப்பாதை பகுதியை சீர்செய்து கழிவுநீர் கால்வாய் கலக்காமல் மழைநீர் வடிகால் அமைத்து தர கோரிக்கை வைத்தனர் இதனையடுத்து தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார் இதனையடுத்து இன்று இப்பகுதி சுரங்கப்பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இதனை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பார்வையிட்டு மழைநீர் பாதையில் தேங்கி நிற்காமல் வெளியேற வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.இதுகுறித்து செய்தியாளர்கள் பேசிய திமுக எம்பி செந்தில்குமார் இப்பகுதி பாதையில் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதி பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே அலுவலர்களுக்கு கடிதம் எழுதினேன் இதனை தொடர்ந்து அவர்கள் சாலையை சீரமைத்து வருகின்றனர் மழைநீர் தேங்காத வகையிலும் கழிவுநீர் கலக்காத வகையிலும் மழைநீர் வெளியேற வடிகால் அமைத்து இப்பகுதியில் நிரந்தர மின்மோட்டார் அமைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.