தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி சங்கீதா தம்பதியினர். இவர்களது மகன் பிரவீன் (15). அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 02) பிரவீன் தனது நண்பர்களுடன் முனியப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் கிணற்றில் ஓரத்தில் மேடான பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பிரவீன் திடீரென எதிர்பாராதவிதமாக கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் பாலக்கோடு தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து ந்த பாலக்கோடு தீயணைப்புத் துறையினர் சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் 4 மணி நேரம் போராடி பள்ளி மாணவன் பிரவீனை சடலமாக மீட்டனர். பத்தாம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இலவச நீட் பயிற்சி பெற 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு!