தருமபுரி மக்களவைத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக திமுக வேட்பாளர் செந்தில்குமார் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழியிடம் மனு அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் எட்டு வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நடத்த உத்தரவு பிறப்பித்தது.
எண்.181 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 973
எண்.182 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 423
எண்.192 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 721
எண்.193 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 714
எண்.194 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 821
எண்.195 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 350
எண்.196 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 723
எண்.197 அய்யம்பட்டி வாக்குச்சாவடி - 708
இந்நிலையில், நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மொத்தம் 5433 வாக்குகள் பதிவாகியுள்ளன. மறு வாக்குப்பதிவில் 14 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.