ETV Bharat / state

தருமபுரியில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது..! - தருமபுரி

தருமபுரி: மக்களைவைத் தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளுக்குட்பட்ட எட்டு வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தருமபுரி
author img

By

Published : May 19, 2019, 8:33 AM IST

தருமபுரி மாவட்டத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவின்போது நத்தமேடு, அய்யம்பட்டி ஜாலி புதூர் ஆகிய பகுதிகளில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக சார்பில் மறுவாக்குப்பதிவு நடத்த, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் அந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.

தருமபுரியில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு

அதன் அடிப்படையில் இன்று காலை 7 மணிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த எட்டு வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 12 பேர் வாக்களிக்க உள்ளனர். இதனை முன்னிட்டு இங்கு 566 காவல் துறையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரது தலைமையில் தொடர்ந்து ரோந்து பணியும் நடைபெற்றுவருகிறது.

Intro:TN_DPI_01_19_RE POLING NEWS_VIS _7204444

Body:TN_DPI_01_19_RE POLING NEWS_VIS _7204444

Conclusion:TN_DPI_01_19_RE POLING NEWS_VIS _7204444... தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் 8 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. கடந்த 18ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப் பதிவின்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு அய்யம்பட்டி ஜாலி புதூர் இப்பகுதிகளில் முறைகேடு நடந்ததாக திமுக சார்பில் மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு பிறப்பித்தது. இன்று காலை 7 மணிக்கு 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் 566 காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தொடர்ந்து ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகளில் 6059 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடியின் உள்ளே மற்றும் வாக்குச்சாவடியின் வெளியே வீடியோ கேமராக்கள் கொண்டு முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.