தருமபுரி: தருமபுரி நகரப் பகுதி அருகே எம்ஜிஆர் நகர்ப் பகுதியில் அரசு நியாயவிலைக் கடை உள்ளது. இந்த நியாயவிலைக் கடை அமைந்துள்ள இடம் நீர்நிலைப் பகுதி என்பதால் அரசு விதிப்படி மின் இணைப்பு வழங்க இயலாத நிலை உள்ளது.
இந்நிலையில், நியாயவிலைக் கடையில் தற்போது டிஜிட்டல் முறையிலான மின்னணு குடும்ப அட்டை மூலம் பொருள்கள் வழங்கப்படுவதால் மின்னணு எந்திரத்திற்கு சார்ஜ் செய்வதற்கு எடை போடும் எந்திரம் போன்றவற்றிற்கு சார்ஜ் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.
![தர்மபுரி எம்பி செந்தில்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-solar-ups-dharmapuri-mp-img-tn10041_03012022102832_0301f_1641185912_265.jpg)
இதனை அடுத்து இப்பகுதி மக்கள் மின்சார வசதி ஏற்பாடு செய்துதர வேண்டும் என தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவைப் பரிசீலித்த செந்தில்குமார் தனது சொந்தப் பணம் 38 ஆயிரம் ரூபாய் செலவில் சூரிய ஒளியில் இயங்கும் வகையிலான சோலார் மூலம் நேரடியாகவும், சூரிய ஒளி இல்லாத சமயத்தில் சுமார் 12 மணி நேரம் வரை மின் வசதி தரும் யுபிஎஸ் கருவி வாயிலாகவும் மின்சாரம் அளிக்கும் வகையில் அரசு நியாயவிலைக் கடைக்கு வழங்கினார்.
![தர்மபுரி எம்பி செந்தில்குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-solar-ups-dharmapuri-mp-img-tn10041_03012022102832_0301f_1641185912_746.jpg)
மேலும், இது குறித்து ட்வீட் செய்துள்ள செந்தில்குமார், 'தருமபுரி எம்ஜிஆர் நகர் அரசு நியாயவிலைக் கடை நீர்நிலைப் பகுதியில் இயங்கும் காரணத்தினால் மின் இணைப்பு வழங்க இயலாத நிலையில் தீர்வு கேட்டு என்னிடம் மனு அளித்தனர். ஒரு வாரத்தில் சொந்த நிதி ரூ.38,000 செலவில் சூரிய சக்தியில் இயங்கும் tubelight, fan, Solar weighing machine Battery வழங்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.
-
தர்மபுரி- MGR நகர் அரசு நியாய விலை கடை நீர்நிலை பகுதியில் இயங்கும் காரணத்தினால் மின் இணைப்பு வழங்க இயலாத நிலையில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
தீர்வு கேட்டு என்னிடம் மனு அளித்தனர்
ஒரு வாரத்தில் சொந்த நிதி ரூ.38,000 செலவில் சூரிய சக்தியில் இயங்கும் tubelight,fan, Solar weighing machine Battery வழங்கப்பட்டது pic.twitter.com/7g1gZC62NW
">தர்மபுரி- MGR நகர் அரசு நியாய விலை கடை நீர்நிலை பகுதியில் இயங்கும் காரணத்தினால் மின் இணைப்பு வழங்க இயலாத நிலையில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 2, 2022
தீர்வு கேட்டு என்னிடம் மனு அளித்தனர்
ஒரு வாரத்தில் சொந்த நிதி ரூ.38,000 செலவில் சூரிய சக்தியில் இயங்கும் tubelight,fan, Solar weighing machine Battery வழங்கப்பட்டது pic.twitter.com/7g1gZC62NWதர்மபுரி- MGR நகர் அரசு நியாய விலை கடை நீர்நிலை பகுதியில் இயங்கும் காரணத்தினால் மின் இணைப்பு வழங்க இயலாத நிலையில்
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 2, 2022
தீர்வு கேட்டு என்னிடம் மனு அளித்தனர்
ஒரு வாரத்தில் சொந்த நிதி ரூ.38,000 செலவில் சூரிய சக்தியில் இயங்கும் tubelight,fan, Solar weighing machine Battery வழங்கப்பட்டது pic.twitter.com/7g1gZC62NW
இந்நிலையில், சோலார் யுபிஎஸ் கருவி வழங்கிய தருமபுரி எம்பிக்கு அப்பகுதி பொதுமக்களும் நியாயவிலைக் கடை பணியாளர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: எழுவர் விடுதலைக்கு ஆளுநரிடம் மீண்டும் அழுத்தம் தரப்படும்- அமைச்சர் ரகுபதி பேட்டி