ETV Bharat / state

தருமபுரியில் மூத்த குடிமக்கள் முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

author img

By

Published : Dec 20, 2021, 6:21 PM IST

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின்கீழ் வரும் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மூத்த குடிமக்கள் முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு தருமபுரி எம்பி கோரிக்கைவிடுத்துள்ளார்.

dharmapuri MP gave petition to union minister

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீரேந்திர குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கோரிக்கையை ஏற்று தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏடிஐபி முகாம் நடத்தி அதன்மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாற்றுத்திறனாளி மக்களுக்கு விடுபட்ட ஏடிஐபி முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளடக்கிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கான முகாம் நடத்தி உதவி உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்டவர்களைப் பணிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் மூத்த குடிமக்கள் நலனுக்கான தேசிய வயோ ஸ்ரீ திட்டத்தின்கீழ் தருமபுரி மாவட்டத்தை நியமனம் செய்ய வேண்டும். முகாம்களை நடத்த தேவையான அனைத்து உதவிகளையும் பயிற்சி பெற்ற மருத்துவப் பயிற்சியாளர் என்ற முறையில் வழங்குகிறேன் என்றும் இம்முகாம் நடத்தப்பட்டால் மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள், எனவே முகாம் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திருந்தி வரும்போது ஏற்றுக்கொள்வதுதான் சிறந்த தலைமைக்கான அழகு - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.