ETV Bharat / state

7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்.? கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி! - நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ்

தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 'சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7 ஆயிரம் டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?' என இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல் மூட்டைகள் மாயம்
நெல் மூட்டைகள் மாயம்
author img

By

Published : May 30, 2023, 10:48 PM IST

தருமபுரி: தருமபுரி திறந்த வெளி நெல் குடோனில் சுமார் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல் வெளியான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நெல் அரவை முகவர்கள் உள்ளனர். இவர்கள், நீண்ட நாட்களாக நெல் குடோன் அமைத்துத்தர வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதன் காரணமாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் பங்களாவின் பின்புறத்தில் உள்ள திறந்தவெளியில் சமீபத்தில் நெல் குடோன் அமைக்கப்பட்டது. இந்த நெல் குடோனுக்கு, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள மூலம் நெல் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: கங்கை முன் திரண்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள்! போலீசாருடன் வாக்குவாதம்.. உச்சக்கட்ட பரபரப்பு!

7,000 டன் நெல் மூட்டைகள் மாயம்: இந்நிலையில், அந்த குடோனில் பாதுகாக்கப்பட்ட மொத்த நெல் மூட்டைகளில், பல டன் நெல் மூட்டைகள் மாயமானதாக நுகர்பொருள் வாணிபக் கழக விஜிலென்ஸ் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, விஜிலன்ஸ் பிரிவு அதிகாரிகள் தருமபுரி உள்ள அந்த திறந்தவெளி நெல் குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுமார் 7,000 டன் நெல் மூட்டைகள் குறைவாக உள்ளதை கண்டுபிடித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Chennai to Tirupati: கிடப்பிலுள்ள சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை.. இந்த ஆண்டிற்குள் நிறைவடையுமா?

இதுகுறித்து தருமபுரி நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்திடம் கேட்டபோது, 'திறந்தவெளி குடோனுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 22 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வந்துள்ளன. இந்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை முறையாக அடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், நெல் மூட்டைகள் குறைய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.

தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மேலும், அங்கிருக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தல் படியே 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 டன் நெல் மூட்டைகளும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனவும் கூறினர். இதன் முடிவில் நெல் மூட்டை அளவு குறைந்துள்ளது என்பது தெரியவந்தால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில், நெல் குடோனில் இருந்து 7 ஆயிரம் நெல் மூட்டைகள் காணாமல் போனதாக செய்திகள் பரவிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பயுள்ளார். அதில், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழ்நாடு மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7ஆயிரம் டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: vellore Baby Death:வேலூரில் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; அல்லேரி மலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? அமைச்சர் பதிலென்ன..?

மேலும், சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7 ஆயிரம் டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமின்றி, மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: TRB: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தூங்குகிறதா? - அன்புமணி ராமதாஸ் விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.