தர்மபுரி: பாலக்காடு, பென்னாகரம், வெளிச்சந்தை, காரிமங்கலம், பேகாரஅள்ளி, அதகபாடி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு தக்காளி சாகுபடியில் ஈடுபடுவது வழக்கம்.
கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தக்காளி விற்பனை குறைந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
சாகுபடி பரப்பு குறைந்ததால் தக்காளி வரத்தும் தற்போது குறைந்துள்ளது. கரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தர்மபுரியிலிருந்து பெங்களூரு, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி அதிக அளவில் அனுப்பப்படுகிறது.
இதனிடையே தக்காளி விலை உயர்ந்து கிலோ 28 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தர்மபுரியில் 28 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படும் தக்காளி், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இதன் காரணமாகத் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தக்காளிச் செடி நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து சுபமுகூர்த்த தினங்கள் வருவதால், தக்காளி விலை மூன்று மாதங்களுக்குக் குறைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. எனவே விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:என்எஸ்ஜி வீரர்கள் இன்று சென்னை வருகை!