தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மொரப்பூர் காட்டுப்பகுதியில் கரிகுட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த தாசப்பன் என்பவரது மகன் முனுசாமி என்கின்ற எலப்பையன் (68). இவா் காட்டுப்பகுதியில் விரகு சேகரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது காட்டு யானை தாக்கியதில் உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காட்டுப்பகுதியில் முனுசாமி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சிலர் வனத் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலையடுத்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தவந்த வனத் துறையினர் மாரண்டஅள்ளி காவல் துறைக்குத் தகவல் அளித்து சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முனுசாமி யானை தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!