தர்மபுரி மாவட்டத்தின் 57ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்,
'தர்மபுரி மாவட்டம் சேலத்தில் இருந்து பிரிந்து 56ஆண்டுகள் காலம் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இன்னும் தொழில் துறையில் முன்னேறவில்லை. மேலும் தர்மபுரியில் இருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் தொழில் துறையில் முன்னேறி உள்ளது.
தர்மபுரி மாவட்ட மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத்திற்குத் தேவையான நிலப்பரப்பு இருந்தும், தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து காவிரி உபரி நீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் மக்களை சென்றடையாமல் உள்ளது.
இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து மாவட்ட மக்கள் அனைவருக்கும் முழுமையான வளர்ச்சியை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர்- பி.ஜி.மல்லையா நேரில் ஆய்வு!