தருமபுரி மாவட்டம், மொட்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம். இவரின் மனைவி பிரியா (41), காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். ஆசிரியை சில இளைஞர்களுடன் தொடர்பில் இருந்து வந்தது குறித்து அறிந்த அவரது கணவர் கண்டித்துள்ளார்
இதையடுத்து, தனது கணவர் பொன்னுரங்கத்தை ஆட்களை ஏவி விட்டு கொலை செய்வதற்கு ஆசிரியை முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து, பொன்னுரங்கம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், காரிமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் (23), அருண்குமார் (24), ஆசிரியர் பிரியா ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கீதா, ஆசிரியை பிரியாவைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருடர்களிடம் தொடர்ந்து நகை வாங்கிவந்த அடகுக்கடை உரிமையாளர்கள் கைது!