தருமபுரி: தமிழ்நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
சுற்றுலாத் தலங்களிலும் அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகையன்று ஒகேனக்கலுக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பானது ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 24 காளைகளைப் பிடித்து கார்த்திக் முதலிடம்