தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் ஒரு நாளில் போட்டி நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளனா்.
போட்டி நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியா் கார்த்திகா தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காளைகளை வாடிவாசல் வழியாக விடுவது, காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்தும் விவாதித்தனா்.
இதையும் படிங்க:11ஆம் வகுப்பு சேரணுமா? ரூ.5 ஆயிரம் கொடு: லஞ்சம் கேட்ட அரசு பள்ளி அலுவலர்கள்?