தர்மபுரி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கத்தை ஆரம்பித்து, நெகிழி இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் நெகிழியில்லா துய்மையான ஒகேனக்கல் பகுதியாக மற்ற நெகிழியில்லா ஒகேனக்கல் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் திவ்யதர்ஷினி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நெகிழி பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கிராமிய கலை குழுவினர் மூலம் நாடகமாக நடித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நெகிழி பயன்பாடு இல்லாத ஒகேனக்கல் என்ற லோகோ-வை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியீட்டு பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் மூலம் மஞ்சப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து கடைகள், சுற்றுலா பயணிகளுக்கு துண்டறிக்கைகளை விநியோகம் செய்தார்.
![d](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14072347_620_14072347_1641097715384.png)
மேலும், ஒகேனக்கல் பகுதியிலுள்ள கடைகளுக்குச் சென்று நெகிழி பயன்பாடு குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கைகளை வழங்கி, ஸ்டிக்கர் ஒட்டினார்.
அப்போது கடைகளுக்குள் நெகிழி பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என சிறு வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: தின்பண்டத்தில் மயக்க மருந்து.. மயங்கிய மூதாட்டி.. ஆண் நண்பருடன் பெண் கைவரிசை!