தர்மபுரி கோ-ஆப்-டெக்ஸ் நெல்லிக்கனி பட்டு மாளிகையில் தீபாவளி விற்பனையை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத விலை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசல் ஜரிகையுடன் கூடிய பட்டுப்புடவைகள் 5 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையும், காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள், ஆரணி பட்டுப் புடவைகள் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கோவை மதுரை பரமக்குடி திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ஒரு கோடியே 40 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
13 வயது சிறுமிக்கு திருமணம்: சரியான நேரத்தில் தடுத்து நிறுத்திய சமூக நலத்துறை!