ETV Bharat / state

மான் வேட்டையாடிய மூவர் கைது: 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

author img

By

Published : Apr 12, 2021, 12:55 PM IST

தர்மபுரி: பென்னாகரம் அருகே மான் வேட்டையாடிய மூவரை வனத் துறையினர் கைதுசெய்து அவர்களிடமிருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்தனர்.

மான் வேட்டையாடிய மூவர் கைது: 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே முதுகம்பட்டி பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாகப் பென்னாகரம் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

பென்னாகரம் வனப்பகுதிக்குள்பட்ட மசக்கல், காப்புக்காடு பேகியம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள வனப்பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையிலான வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நான்கு பேர் நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு இரண்டு மான்களை வேட்டையாடியது தெரியவந்தது. இந்நிலையில் வேட்டையாடியதாக அத்திமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் (50), ஏர்கோல் பட்டியைச் சேர்ந்த முருகன் (48), முத்தையன் (52) ஆகிய மூன்று பேரை பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வனவிலங்கு வேட்டைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

மேலும் வேட்டையாடுவதற்காகப் பயன்படுத்திய இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்தனர். தலைமறைவான மோகன் என்பவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.