கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்ததன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் ராசிமணல் பகுதியில் அதிக அளவு முதலைகள் இருக்கின்றன.
தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் அழுத்தத்தால் ஆறுகளின் ஆழமான பகுதியை வாழ்விடமாகக் கொண்ட முதலைகள் தண்ணீரால் அடித்துச் செல்லப்படுகின்றன.
ஒகேனக்கல் மெயின் அருவி பகுதிக்கு அருகாமையில் உள்ள மரங்கள் சூழ்ந்தப் பகுதியில் முதலை ஒன்று பாறையின் மீது இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தருவதற்கு முன்பே, முதலை மீண்டும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வழக்கமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மீன்கள், மலைப்பாம்புகள், முதலைகள் அடித்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
![crocodile spotted at hogenakkal in cauvery](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-hoganakkal-crocodile-img-7204444_09082020094808_0908f_1596946688_158.jpg)
இதையும் படிங்க... எனக்கு ஓய்வெடுக்க இடம் கிடைச்சுட்டு... முதலை நிம்மதி பெருமூச்சு..!