கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களிலும் கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்களுக்கு கை கழுவுதல் குறித்து எடுத்து கூறி, கிருமி நாசினியை கைகளில் தெளித்து கை கழுவிய பின்பு மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் யாராவது பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:’கொரோனாவை தடுப்பது குறித்து விஜயபாஸ்கர் சீனாவிற்கே அறிவுரை வழங்கலாம்’ - காங்கிரஸ்