ETV Bharat / state

தருமபுரியில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி - அமைச்சர் கே.பி. அன்பழகன்

author img

By

Published : Apr 2, 2020, 4:19 PM IST

தருமபுரி: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் மட்டும் புதுதில்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

minister anpazhakan
minister anpazhakan

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கரானோ தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. தருமபுரியில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெருமளவில் இல்லை. டெல்லிக்கு சென்று வந்தவர்கள் மூலம் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மண்டல அளவில் சேலத்தை மையமாகக் கொண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்றவர்களில் வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்திற்குள் வராமல், புதுதில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருமபுரியில் 1,061 நியாயவிலைக் கடைகள்

  • தமிழ்நாட்டில் 35 லட்சத்து 244 நியாயவிலை கடைகளில் தகுதி வாய்ந்த 2 கோடியே ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரண பொருட்களும் 1000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
  • தருமபுரி மாவட்டத்தில் நான்கு லட்சத்து 28 ஆயிரத்து 20 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரண பொருள்கள் வழங்கப்படுகின்றன.
  • தருமபுரி மாவட்டத்தில் 1,061 நியாயவிலைக் கடைகள் உள்ளன.
  • ஒரு நியாய விலை கடையில், ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்கப்படும்.
  • காலையில் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பிற்பகலில் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் வழங்கப்படும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், தூய்மை காவலர்கள், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: மூன்று அரசு மருத்துவமனைகள் கோவிட் 19க்காக மாற்றம் - தங்கமணி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.