தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 13) ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 238 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று 3 வயது குழந்தை உள்பட மேலும் 20 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் 258ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 97 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.