தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1200ஆக இருந்தது.
செப்டம்பர் மாத ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 17 நாட்களில் ஆயிரத்து 200 நபர்களுக்கு மேல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று (செப்.17) மாவட்டத்தில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 446ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.