கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலர் தேவையின்றி அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வருவதாக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வருகின்றனர்.
இவ்வாறு வெளியில் வாகனங்களுடன் வரும் மக்களை வீட்டிலேயே தங்க வைப்பதற்காக தருமபுரி காவல்துறை ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. வாரத்தின் ஏழு நாள்களுக்கும் ஒவ்வொரு விண்ணம் வாகனங்களில் பூசப்படும். இதன் மூலம் திங்கள்கிழமை தனது வாகனத்துடன் வெளியில் வந்த நபர் மீண்டும் அடுத்த திங்கள்கிழமைதான் வெளியில் வரமுடியும். இதனால் தேவையின்றி பொதுவெளியில் வாகனங்களுடன் சுற்றித் திரிவது கட்டுப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதியப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!