தருமபுரி மாவட்ட நகராட்சிக்குள்பட்ட குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக சென்னை சென்றார். அதையடுத்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டதால் மீண்டும் தருமபுரி திரும்பினார். அதனால் அவருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து அவர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதன்படி, தருமபுரியில் இதுவரை 27 பேர் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் இரண்டு சிறுவர்களுக்கு கரோனா தொற்று