தருமபுரி மாவட்டம் கெட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி ஸ்ரீரங்கன் (42). நேற்று வீட்டிலிருந்து வெளியில் சென்ற இவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையில் கெட்டுப்பட்டி அருகேவுள்ள சின்னபெரமன ஏரிக்கரயில் ஸ்ரீரங்கனின் காலணி, ஆடை கிடைத்ததாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஏரியில் ஸ்ரீரங்கனை தேடும் முயற்சியில் இறங்கினர்.
சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின் ஸ்ரீரங்கன் உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசிச்சென்றனரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:750 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்: ஒருவர் கைது