ETV Bharat / state

குடும்பத்துடன் தீக்குளிக்க அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு!

தருமபுரி: மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருவாய் அலுவலர்கள் அலைகழித்து வருகின்றனர் இதனால் குடும்பத்துடன் தீக்குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

Complaint to the Collector's Office that the DRO was missing

author img

By

Published : Sep 22, 2020, 3:09 AM IST

தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரை மூன்று ஆண்டுகளாகப் பார்க்க முடியவில்லை. நிலப் பிரச்னை தொடர்பாக மனு அளித்து, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரை பல முறை பார்க்க வந்தேன். ஆனால், அலுவலக ஊழியர்கள்‌ வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பார்த்தபோது தனது மனு அங்கு இல்லை என்று அங்குள்ள ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னை மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அலுவலர்கள் அலைகழித்து வருகின்றனர். இதனால், மன வருத்தத்துடன் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள் திருமால் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.