தர்மபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் தொற்று எண்ணிக்கை குறையவில்லை.
இந்நிலையில் புதிதாக மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற திவ்யதர்ஷினி, நேற்று (மே.20) தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற ஆய்வில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், பரிசோதனைகள், மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் வசதிகள், படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கேட்டறிந்தார்.
இதையும் படிங்க : 'யானை மீட்பும் கரோனா மீட்பும்' - ஐடியா தந்த ஆனந்த் மஹிந்திரா