தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிபட்டி புதூர் பகுதியில் உள்ள கிராம மக்களை சந்தித்து கரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு குறித்து பொது மக்களுக்கு ஆட்சியர் மலர்விழி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரைகளை வழங்கினார்.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். தேவையின்றி வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது. என பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் தூய்மைப்பணி கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள நபர்கள் எப்படி தனியாக இருக்க வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் பிரதாப், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.