தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதையொட்டி, தர்மபுரி மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.பி. கார்த்திகா இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமார், சார் ஆட்சியா் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோரும் இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
![voters awereness](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-voters-awerennes-collector-sp-rally-vis-tn10041_14032021122822_1403f_1615705102_639.jpg)
திட்ட இயக்குநர் கவிதா கொடியசைத்து தொடங்கிவைத்த இப்பேரணி, இலக்கியம்பட்டி, பாரதிபுரம், நெசவாளா் காலனி வழியாக நான்கு ரோடு வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது. தர்மபுரி நகர காவல் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இதையும் படிங்க:கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா?