ETV Bharat / state

எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி முயற்சி: டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி நீடிக்கும் என்ற எண்ணத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார் என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

dhinakaran
author img

By

Published : Jul 15, 2019, 12:42 PM IST

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலையை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர், சட்டப்பேரவை இடைதேர்தலில் 9 தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு ஆட்சி நீடிக்கும் என்ற நம்பிக்கையில் 8 வழி சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்து வருகிறார். மக்கள் நிச்சயம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவார்கள் என்று கூறினார்.

எடப்பாடி எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முயற்சி: டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி, விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட கூடிய சூழ்நிலை உள்ளதால், அங்கு போட்டியிடவில்லை. தற்போது தேர்தலில் போட்டியிட்டால் மூன்று தொகுதிகளுக்கும் மூன்று சின்னம் வழங்குவார்கள், எனவே கட்சியை பதிவு செய்த பிறகு ஒரு சின்னம் வழங்கிய பிறகு தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார்.

Intro:tn_dpi_01_ttvdinakaranpressmeet_byte_7204444

Body:tn_dpi_01_ttvdinakaranpressmeet_byte_7204444

Conclusion:
எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீட்டிக்கும் என்ற எண்ணத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை  செயல்படுத்த துடிக்கிறார்  டிடிவி தினகரன் தருமபுரியில் பேட்டி. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன். எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் மக்கள் மனநிலையை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு சட்டமன்ற இடை தேர்தல் முடிந்து 9 சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு ஆட்சி நீடிக்கும் என்பதால் 8 வழி சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள் மக்கள் நிச்சயம் இதற்கெல்லாம்மக்கள் ஒரு முடிவு கட்டுவார்கள் .அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளது என்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட கூடிய சூழ் நிலையில் உள்ளதால் போட்டியிடவில்லை என்றும்தற்போது தேர்தலில் போட்டியிட்டால் 3 தொகுதிகளுக்கும் 3 சின்னம் வழங்குவார்கள் என்றும் எனவே கட்சியைப் பதிவு செய்த பிறகு ஒரு சின்ன வழங்கும்போது தேர்தலில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.