ETV Bharat / state

இயற்கையை காக்க 'விதை விநாயகர்' ஆன்லைனில் விற்பனை! - விதை விநாயகர் சிலை

தருமபுரி: இயற்கையை காக்கும் வகையில் களிமண்ணில் தயாரிக்கப்படும் விதை விநாயகர் சிலைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் விற்பனையாகின்றன.

vinayaka statue
vinayaka statue
author img

By

Published : Aug 18, 2020, 12:54 AM IST

Updated : Aug 18, 2020, 10:35 PM IST

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. இதையொட்டி, கற்பனைக்கும் எட்டாத வகையில் வண்ண அலங்காரத்துடன் பளபளக்கும் சிலைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன. கெமிக்கல் பூசப்பட்ட நிறங்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் கண்களை கவர்ந்தாலும், அதனால் ஏற்படும் மாசை யாரும் கவனிப்பதில்லை.

அதுபோன்ற விநாயகர் சிலைகளை ஆட்டம் பாட்டத்துடன் ஆறு, குளம், குட்டைகள் ஏரிகளில் கரைத்து விட்டு, அடுத்த வேலையை நோக்கி செல்கின்றனர். ஆனால், தற்போது நிலவி வரும் பொது முடக்கத்தால் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, வழக்கமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு உற்சாகம் குறைந்து காணப்படுகிறது. இதுபோன்ற சூழலில் விநாயகர் சிலை விற்பனையாவது மிகவும் கடினம் தான்.

இதனை சவாலாகவே ஏற்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலையை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியில் மூன்று பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து கடந்த நான்கு ஆண்டுகளாக களிமண்ணால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆன்லைன் மூலம் வெளிநாட்டிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

இயற்கை விதை விநாயகர் சிலை
இயற்கை விதை விநாயகர் சிலை

களிமண்ணில் விதை விநாயகர்:

எதிர்கால தலைமுறையைக் கருத்தில் கொண்டு, களிமண்ணோடு காய்கறி, கீரை மற்றும் வேம்பு விதைகள் போன்றவற்றை சேர்த்து விநாயகர் சிலையை வடிவமைக்கின்றனர். இதில், செயற்கை சாயங்கள் எதுவும் கலக்காமல் களிமண்ணால் அழகுபடுத்துகின்றனர். ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விலை நூறு ரூபாயில் இருந்து 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டை விட இந்த வருடம் ஆறாயிரம் விதை விநாயகர் சிலைகளை வடிவமைத்துள்ளனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை 'சீட்ஸ்விநாயகர்' என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கும் இடங்களுக்கு விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கரோனா போன்ற பேரிடர் காலத்தில் அதிகளவில் விநாயகர் சிலை விற்பனையாகியுள்ளது.

தருமபுரி இளைஞர்
தருமபுரி இளைஞர்

உலக நாடுகளுக்கு ஆன்லைன் விற்பனை

குறிப்பாக, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தருமபுரியில் இருந்து ஆன்லைன் மூலம் விநாயகர் சிலைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட முடிவெடுத்துள்ளனர். இதனால், ஆன்லைனில் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இயற்கையை காக்க 'விதை விநாயகர்'

இயற்கையை காக்கும் விதை விநாயகர்

வீட்டிலிருந்தே இயற்கையை போற்றும் இந்த நாள் இனிய நாளே. ஆகவே விதை விநாயகர் சிலையை ஒரு தொட்டியில் தண்ணீரால் கரைப்பதன் மூலம் அதிலிருந்து உருவாகும் விதை நாளை மரமாக உயரும். இவை சிறுவர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் விதமாக உள்ளது. விதை விநாயகர் சிலைகள் இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் உள்ளது. இனிவரும் காலங்களில் கெமிக்கல் நிறைந்த வண்ணம் பூசப்பட்ட விநாயகரை துறந்து, இயற்கையை காக்கும் விநாயகர் சிலையை வாங்குவோம்.

இதையும் படிங்க: பாஜக கொடி கம்பத்தில் தேசியக்கொடி : பாஜக தலைவர்கள் மீது புகார்

Last Updated : Aug 18, 2020, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.