தருமபுரி: தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 'முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று(பிப்.20) நண்பகல் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகள் முகாம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த அதியமான் கலந்துக்கொண்டு போட்டியில் விளையாடினார்.
விளையாடிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அதியமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளையாட்டு போட்டியின் போது வட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் அரசு அதிகாரிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
“தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு. அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/2 pic.twitter.com/4BAO1IoOYJ
">“தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு. அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 20, 2023
1/2 pic.twitter.com/4BAO1IoOYJ“தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் திரு. அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 20, 2023
1/2 pic.twitter.com/4BAO1IoOYJ
இதனிடையே, வட்டாட்சியர் அதியமான் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தபோது வட்டாட்சியர் அதியமான் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். வட்டாட்சியர் அதியமானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.