ETV Bharat / state

ராட்சத குழாயில் பதுங்கியிருந்த சிறுத்தை சிக்கியது! - குடிநீர் குழாய்

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலைய குழாயில் பதுங்கியிருந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்தனர்.

சிறுத்தை
author img

By

Published : Mar 28, 2019, 9:53 AM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. இரவு பணியில் இருந்த பணியாளர் அதனை நாய் என நினைத்து துரத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்பு அடுத்த நாள் அங்கு பணியில் இருந்த பணியாளர் சிறுத்தையை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரி கேசவன் தலைமையிலான குழுவினர் வந்து சோதனையிட்டனர். சிறுத்தை அங்கு இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

Forest officials with the cage
கூண்டுடன் வனத்துறை அதிகாரிகள்

பின்னர் மற்றொரு வனத்துறை குழுவினர், மீண்டும் அதே பகுதியில் சோதனை செய்தபோது குடிநீர் குழாயில் சிறுத்தை பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குழாயின் ஒருமுனையில் வலையை கட்டிவிட்டு மற்றொரு முனையில் இறைச்சியுடன் கூண்டு வைத்தனர். இதைப் பார்த்த சிறுத்தை மாலை 7 மணியளவில் இறைச்சியை திண்பதற்கு வந்த போது கூண்டில் சிக்கியது.

குடிநீர் குழாயில் பதுங்கியிருந்த சிறுத்தை சிக்கியது

இதையடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை மயக்கமடைய செய்து வனத்துறையினர், அதனை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

---------- Forwarded message ---------
From: GOPAL BEEMAN <gopal.beeman@etvbharat.com>
Date: Wed 27 Mar, 2019, 10:05 PM
Subject: தருமபுரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் மூன்று நாட்களாக போக்குக்காட்டிய சிறுத்தை இன்று பிடிபட்டது.
To: Tamil Desk <tamildesk@etvbharat.com>

தருமபுரி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் மூன்று நாட்களாக போக்குக்காட்டிய சிறுத்தை இன்று பிடிபட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. இரவு பணியில் இருந்த பணியாளர் அதனை நாய் என நினைத்து துரத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு அடுத்த நாள் அங்கு பணியில் இருந்த பணியாளர் சிறுத்தையை கண்டு அலறி அடித்து ஓடியுள்ளார். பின்பு கூட்டு குடிநீர் திட்ட உயர் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் வனத்துறைக்கு இத்தகவலை தெரிவித்துள்ளனர் . ஒகேனக்கல் வன அலுவலர் கேசவன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து சிறுத்தையை தேடியுள்ளனர் அங்கு சிறுத்தை இல்லை என திரும்பி சென்று விட்டனர் . இந்நிலையில் பென்னாகரம் வனசரக அலுவலர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் சிறுத்தை உள்ளதா என குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு பெரிய குழாயில் சிறுத்தை உள்ளதை அவர்கள் கண்டறிந்து குழாய் இருபுறங்களிலும் வலைவிரித்து காத்திருந்துள்ளனர் இன்று இரவு ஏழு மணிஅளவில் சிறுத்தை மலைக்கு அருகே உள்ள மாமிசத்தை உட்கொள்ள வந்தபோது கூண்டினுள் பிடிபட்டது.பிடிபட்ட சிறுத்தை பத்திரமாக அடர் காட்டுப்பகுதியில் விட பெண்ணாகரம் வனத்துறையினர் கொண்டு சென்றனர்.சிறுத்தை பிடிபட்டதால் கூட்டு குடிநீர் திட்ட அலுவலக பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.