ETV Bharat / state

தர்மபுரியில் குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி செயல்பாட்டினை டிஐஜி தொடங்கிவைப்பு - help of common people

தர்மபுரி: அரூரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டினை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

அரூரில் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு  கேமரா செயல்பாட்டினை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.

author img

By

Published : Oct 21, 2020, 7:56 AM IST

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, பொதுமக்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, சார் ஆட்சியர் பிரதாப், டிஎஸ்பி தமிழ்மணி இருவரும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அரூர் நகரில் பஜார் தெரு, பேருந்து நிலையம், கச்சேரி மேடு சாலை சந்திப்பு, திருவிக நகர், நான்காம் ரோடு, சேலம் பைபாஸ் சாலை, மகளிர் மேல்நிலை பள்ளி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 19 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை, அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள அகன்ற திரையில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். அரூர் நகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை 24 மணி நேரமும் அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் அகன்ற திரையின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் செல்போன் வழியாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவங்களை தடுக்க மக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமிரா!
குற்றச் சம்பவங்களை தடுக்க மக்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமரா!

அதுமட்டுமின்றி அரூர் சார் ஆட்சியர் பிரதாப், டிஎஸ்பி தமிழ்மணி, காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் தங்களது செல்போன்களில் 24 மணி நேரமும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கரோனா ஊரடங்கால் பயனற்றுபோன விளையாட்டுப் பயிற்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.