தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் அணையில் உள்ள சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர்.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் சக்தி (30) என்பது தெரியவந்தது. சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று (ஆகஸ்ட் 23) திருமணம் நடைபெற்றது.
திருமணமான அடுத்த நாளிலேயே புதுமாப்பிள்ளை சக்தி வாணியாறு அணையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சக்தி கொலை செய்யப்பட்டாரா அல்லது அணையில் தவறிவிழுந்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியாறு அணையில் புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு; கொலையா? காவலர்கள் விசாரணை! - வாணியாறு அணை
தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் புது மாப்பிள்ளையின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.