ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடி பெருக்கு விழாவாக கொண்டாப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அந்நாளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். அதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் மூன்றாம் தேதி (சனிக்கிழமை) அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்டு 17ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் என்றும் அறிவித்துள்ளார்.