தருமபுரி மாவட்டம் சவுளுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் காளியப்பன். கட்டட மேஸ்திரியான இவர், பழைய ஒட்டப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரமசிவம் என்பவர் அவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தை வெட்டி கயிறு கட்டி இழுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த தென்னை மரம் நடந்து சென்ற காளியப்பன் மீது விழுந்தது. இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் காளியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காளியப்பனின் மனைவி சாந்தி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு கட்டடத்திற்காகத் தோண்டப்பட்ட குழி: தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு