ETV Bharat / state

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி... - Cauvery Surplus Water Project

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கலில் இருந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Aug 19, 2022, 1:22 PM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தின் மூலம், காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறார். இந்த நடைப்பயணத்தை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் அன்புமணி தொடங்கியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மூன்று நாள் நடைபயணத்தை தற்போது ஒகேனக்கலில் தொடங்கி இருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து, போதிய வேலைவாய்ப்பின்றி, தொழில் வாய்ப்பின்றி, போதுமான குடிநீர் வசதி இன்றி உள்ளனர்.

ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ்
ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைபயணத்தை தொடங்கிய அன்புமணி ராமதாஸ்

மேலும் இந்த மாவட்டத்தின் நிலத்தடிநீரில் புளோரோசிஸ் என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளதால், இங்குள்ள மக்கள் உடல்நலம் மற்றும் மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் வாழும் சூழலின்றி சுமார் நான்கு லட்சம் பேர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.

இதுதான் ஒரே தீர்வு: இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்ப வேண்டும். வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரி நீரில் சுமார் மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

கடந்த 35 நாட்களில் காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் நீரேற்று முறையில் எடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பினால் மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் இது தீர்வாக அமையும்.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர் 700 முதல் 1,000 அடியில் தான் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிய பின், 50 முதல் 60 அடியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது தென்மேற்கு பருவமழை காலத்திலும் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் சேர்த்து காவிரி ஆற்றில் சுமார் 200 டிஎம்சி தண்ணீருக்கு மேல் வீணாக கடலில் கலக்கப்போகிறது.

இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சுமார் 700 முதல் 800 கோடி மட்டுமே செலவாகும். காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

நிலைப்பாடு: குறிப்பாக இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் அவரும் இந்த திட்டத்தை அறிவித்தார். பின்பு சென்று அவரிடம் நேரில் பேசியபோது நிதியில்லை என்ற ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

தற்போது உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. தருமபுரி மாவட்டத்தில் பாதித்துள்ள 8 லட்சம் மக்களின் பிரச்னைகளின் தீர்வாக இத்திட்டம் அமையும் என்பதை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு உடனடியாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை பயன்படுத்துவதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலில் வீணாக கலக்கின்ற தண்ணீரை எடுத்து மட்டுமே திட்டம் செயல்படுத்த கோரிக்கை வைக்கிறோம். தற்போது இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபயணத்தை தொடங்கியுள்ளது.

இது மக்கள் இயக்கமாக எடுத்துச் சென்று அரசை வலியுறுத்த உள்ளோம். இந்த நடை பயணத்தில் எந்தவித அரசியலும் மற்றவரை விமர்சிப்பதும் சிறிதும் இல்லை. தமிழ்நாட்டின் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி முதன் முதலில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை நடத்தியது.

அதன் விளைவாக அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தற்போது காவிரி உபரி நீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டால் பாமக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்தார்.

இதையும் படிங்க: போதை, மது, சூது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், முழங்கிய அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.