ETV Bharat / state

தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்... அன்புமணி ராமதாஸ்

காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்தினால் தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்... மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Aug 20, 2022, 6:56 AM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடை பயணத்தை நேற்று (ஆக. 19) தொடங்கினார். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த நடை பயணத்தின் மூலம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்த உள்ளார்.

இந்த நடை பயணத்தை ஒகேனக்கலில் தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி மூன்று நாள் நடை பயணத்தை தற்போது ஒகேனக்கலில் தொடங்கியிருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே தர்மபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். இங்குள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்து, போதிய வேலைவாய்ப்பின்றி, தொழில் வாய்ப்பின்றி, போதுமான குடிநீர் வசதி இன்றி உள்ளனர். மேலும் இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரோசிஸ் என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளதால் இங்குள்ள மக்கள் உடல்நலம் மற்றும் மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், மாவட்டத்தில் வாழும் சூழலின்றி சுமார் 4 லட்சம் பேர் வேலைத் தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றி இங்குள்ள உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்ப வேண்டும்.

ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்... மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

வெள்ளப்பெருக்கு காலங்களில் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரில் சுமார் மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். கடந்த 35 நாட்களில் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.

மூன்று டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் நீரேற்று முறையில் எடுத்து இங்குள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்பினால் மாவட்டத்தில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக அமையும். தற்போது தர்மபுரியில் நிலத்தடி நீர் 700 முதல் 1000 அடியில்தான் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றிய பின் 50 முதல் 60 அடியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

தற்போது தென்மேற்கு பருவமழை காலத்திலும் அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை காலத்திலும் சேர்த்து காவிரி ஆற்றில் சுமார் 200 டிஎம்சி தண்ணீருக்கு மேல் வீணாக கடலில் கலக்கப்போகிறது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு சுமார் 700 முதல் 800 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி பாமக பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் அவரும் இந்த திட்டத்தை அறிவித்தார். பின்பு சென்று அவரிடம் நேரில் பேசிய போது நிதியில்லை என்ற ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டார்.

தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடமும் இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. பாதிக்கப்பட்டுள்ள 8 லட்சம் மக்களுடைய பிரச்சினைகளின் தீர்வாக இத்திட்டம் அமையும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை பயன்படுத்துவதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலில் வீணாக கலக்கின்ற தண்ணீரை எடுத்து மட்டுமே திட்டம் செயல்படுத்த கோரிக்கை வைக்கிறோம்.

தற்போது இத்திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடை பயணத்தை தொடங்கியுள்ளது. இது மக்கள் இயக்கமாக எடுத்துச்சென்று அரசை வலியுறுத்த உள்ளோம். இந்த நடை பயணத்தில் எந்தவித அரசியலும், இல்லை. மற்றவரை விமர்சிக்கும் நோக்கம் சிறிதும் இல்லை.

தமிழ்நாட்டில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி முதன்முதலில் பாமக போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. தற்போது காவிரி உபரி நீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டால் பாமக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவரும், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:ஓ.பன்னீர்செல்வம் இனி புலியாக மாற வேண்டும்... சையது கான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.