ETV Bharat / state

தர்மபுரி எல்லையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! - சேலம் சென்ற முதலமைச்சர் பழனிசாமி

தர்மபுரி: சேலம் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு தர்மபுரி எல்லையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரேவற்றார்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Feb 10, 2021, 7:33 PM IST

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி முதலமைச்சர் பழனிசாமி மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதலமைச்சர், இன்று (பிப்.9) கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் வழியாக சேலம் சென்றார்.

அப்போது, கிருஷ்ணகிரி - தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலம் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை தமிழ்நாடு உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்நிகழ்வில் பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், தர்மபுரி சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தை அமாவாசை: மதுரை டூ ராமேஸ்வரம்.... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.