தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார் . அவருக்கு ஆதரவாக டிடிவி தினகரன் இன்று பாலக்கோடு பகுதியில் தொடங்கி பாப்பாரப்பட்டி, பென்னாகரம், இண்டூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அதில் பேசிய அவர்;
- என்னை மக்கள் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற செய்து திமுகவை டெபாசிட் இழக்க செய்தார்கள்.
- இம்முறை அச்சின்னம் வழங்கவில்லை என்றாலும், நீதிமன்றத்திற்கு சென்று ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தைப் பெற்று வந்துள்ளோம்.
- எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வராததால் தான் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி தமிழகத்தில் பறிபோனது.
- நம் ஆட்சியில் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மறுமலர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் யாருக்கும் தலைவணங்காமல் அடிபணியாத இயக்கம் அமமுக.
- அனைவரும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்குகளைப் பதிவுசெய்யவும்.
மேலும், என்றும் மக்களுக்கு மட்டும் தான் நாங்கள் தலைவணங்குவோம், வேறு எந்தக் கொம்பனுக்கும் தலை வணங்க மாட்டோம் என்றும் தினகரன் பேசியுள்ளார்.