அதிமுக கூட்டணியில் பென்னாகரம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணி, இன்று மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரண்டு முறை பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினராக சிறப்பாக பணியாற்றிய எனக்கு, தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களும் நன்கு தெரியும். மக்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். அதனால் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், என்னை வெளியூா்காரன் என்கிறார் திமுக வேட்பாளா் இன்பசேகரன். இத்தொகுதியில் சிறுவயது முதல் வாக்களித்து வருகிறேன். இன்பசேகரன் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பேசி வருகிறார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இங்கேயே தங்கியிருந்தேன். தேர்தலுக்கு பிறகும் பென்னாகரத்திலேயே தங்கி சேவை செய்வேன்” என்றார்.
இதையும் படிங்க: காவல் நிலைய பணப்பட்டுவாடா வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்