ETV Bharat / state

அரூரில் 53 நாட்களில் கதிர் விட்ட நெற்பயிர்கள்.. வயல்களில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள்! - தனியார் நிறுவன ரக விதை நெல்

Dharmapuri News: அரூர் வட்டத்தில் நடவு செய்த நாற்று 53 நாட்களில் கதிர் விட்ட வயல்களில் வேளாண் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

அரூர் விவசாய வயல்களில் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 10:40 PM IST

அரூர் விவசாய வயல்களில் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு

தருமபுரி: அரூர் பகுதியில் உள்ள விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர், தனியார் கடை ஒன்றில் தனியார் நிறுவன ரகமான ‘ஈஸ்வர்-22’ என்ற ரக விதை நெல் வாங்கி நாற்று வளர்த்து வயல்களில் நடவு செய்தனர். இது, நடவு செய்த 53 நாட்களிலேயே கதிர் விடத் தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இதுபற்றி செய்தி வெளியான நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, விதை நெல் விற்பனை செய்த கடையிலும், விவசாயிகளின் வயல்களிலும் நேற்று (அக்.18) மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.19) பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பையூர் அறிவியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் வயல்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, ஆய்வுக்குப் பின் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர் கீதா கூறுகையில், “தனியார் நிறுவன ரக விதை நெல்லை அரூர் பகுதியில் உள்ள அக்ரோ சர்வீஸ் கடையில், இப்பகுதி விவசாயிகள் வாங்கி நாற்று வளர்த்து வயல்களில் நடவு செய்துள்ளனர். இந்த விதை நெல், 120 நாட்களில் விளைச்சல் தரும் குறுவை ரக நெல் எனக் கூறி விவசாயிகளிடம் விற்றுள்ளனர்.

இதுபோன்ற ரகங்கள் 75 முதல் 80-வது நாளில் தான் கதிர்கள் விடும். ஆனால், இப்பகுதி விவசாயிகளின் வயல்களில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் குறைந்த காலத்திலேயே கதிர் விட்டுள்ளன. இதை சரிசெய்ய சில பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளோம். அதை விவசாயிகள் பின்பற்றிய பிறகு பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த வயல்களில் கள ஆய்வு மேற்கொள்வோம்.

பயிர்களில் முன்னேற்றம் இல்லையெனில், அதற்கேற்ப இறுதி முடிவு எடுக்கப்படும். விதை நெல்லில் ஏற்பட்ட தவறா? அல்லது இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமா? என்பதையெல்லாம் அப்போது ஆய்வு செய்வோம். விவசாயிகள் விதை, உரம், மண்புழு உரம் என எதை வாங்கினாலும், அதே தேதியில் கட்டாயம் ரசீது வாங்கிக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை பேராசிரியர் முனைவர் சிவக்குமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட வயல்கள் அனைத்திலும் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டதில், விவசாயிகளில் சிலர் நெற்பயிருக்கான அடியுரமாக மாறுபட்ட உரங்களை பயன்படுத்தி உள்ளனர். தற்போது ஜிங் சல்பேட் பயன்படுத்தவும், நெற்பயிர் வளர்ச்சிக்காக ஏக்கருக்கு யூரியா 30 கிலோ, பொட்டாஷ் 15 கிலோ அளவில் பயன்படுத்த வேண்டும்.

மேலும், இலை வழியாக சத்து எடுத்துக் கொள்ளும் வகையில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் ஜிங் சல்பேட் கலந்து தெளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றி 20 நாட்கள் வரை கண்காணித்த பிறகே அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்ய உள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் எதற்கு? - அண்ணாமலை சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.