ETV Bharat / state

'தலைமையேற்க வாருங்கள்' - சின்னம்மாவுக்கு போஸ்டர் ஒட்டிய அம்மாவின் பிள்ளைகள்! - சசிகலாவை வரவேற்று தர்மபுரியில் சுவரொட்டி

தர்மபுரி: அரூரில் அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவை வரவேற்று அதிமுக ஒன்றிய துணை செயலாளர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

posters in dharmapuri welcoming sasikala

author img

By

Published : Feb 2, 2021, 8:39 PM IST

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கரோனா தொற்று காரணமாக, சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை முடிந்து பெங்களூரில் தனிமையில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்ந நிலையில் தமிழ்நாடு முழுவதும் சசிகலாவை அதிமுக தலைமையேற்கும் கழக நிரந்திர பொதுச்செயலாளர் என வரவேற்று அதிமுகவினர் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் சி.எம். கோட்டி, சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதில் சசிகலாவை அதிமுக பொதுசெயலாளர் என்றும், தமிழ்நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை அரூர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையம், கச்சேரி மேடு, வட்டாட்சியர், பிடிஓ அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியுள்ளனர். இச்செயல் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க... தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா - அதிமுக நிர்வாகி சசிகலாவுக்கு வைத்த பேனரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.