தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி தேன்மொழி (34). இவர் கடந்த 24ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் அவரது சடலம் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து தேன்மொழி இறப்பிற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் தேன்மொழிக்கும் அவருடன் பணியாற்றிய பாகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அசோகனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நகைக்காக நடந்த கொலை
அசோகன் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது கடன் பிரச்சினையால் சிக்கி தவித்து வந்துள்ளார். இதனால் தேன்மொழியை திருமணம் செய்வதாக அழைத்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து மயங்கிய நிலையில் இருந்தபோது நகைகளை பறித்துக்கொண்டு சேலையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடருந்து 6 சவரன் தங்க நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பணம் தர மறுத்த தாயைக் கொன்ற மகன்