தர்மபுரி: பென்னாகரம் அருகேயுள்ள மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட நரசிபுரம் இடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் பெட்ரோல் ஊற்றி பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதனை அப்பகுதியில் உள்ள மாடு மேய்க்கும் முதியவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து சென்ற பெரும்பாலை காவல் துறையினர் மற்றும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மோப்பநாய் உதவியுடன் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலமாகத் தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
இறந்த இளைஞர் வலது பக்க கையில் SRM என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதேபோல் இடது பக்க கைவிரல்களின் ஐந்து விரல்களும் நகம் இல்லாமல் மொட்டையாக இருந்தது காவல்துறையினரின் முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. இறந்து கிடந்த இளைஞர் குறித்து யார் இவர்? எந்தப்பகுதியைச் சேர்ந்தவர்? கொலை செய்தவர்கள் யார் யார் எனப்பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![பென்னாகரம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் ஊற்றி வாலிபர் கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-pennagaram-marder-vis-tn10041_11092022140346_1109f_1662885226_887.jpg)
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி