கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 45 ஆயிரம் கன அடி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. நேற்று (செப். 24) மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று (செப். 25) 15 ஆயிரம் கன அடி நீர் உயர்ந்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து நீர்திறப்பு இன்று, 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், இன்னும் இரு தினங்களில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஆறு மாதங்களுக்கு பிறகு 'கோக்கர்ஸ்வாக்' திறப்பு