கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. பொது மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழ்நாடு அரசு கரோனா நிவாரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி விநியோகிப்பதற்கு தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து ரயில் மூலம் 2000 டன் நெல் தருமபுரிக்கு வந்தது.
நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் நெல் அரவை பணிக்காக மாவட்டம் முழுவதும் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அரவை ஆலைகளிலிருந்து பெறப்படும் அரிசி அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் 100க்கும்மேற்பட்ட லாரிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: