தமிழ்நாடு முழுவதும், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மதுபானக் கடைகள் மூடப்படுவதால், மது பிரியர்கள் இன்று காலை முதலே அனைத்து மதுபானக் கடைகளிலும், குவியத் தொடங்கி தங்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். அப்போது, மணி ஆறு நெருங்கியபோது, மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து காவல் துறையினர் மதுப்பிரியர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால், சிலர் தங்களுக்கு தேவையான மதுபானம் கிடைக்காதால் சோகமாகச் சென்றனர்.
இதையும் படிங்க: கரோனா: ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்