கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரின் மனைவி தேன்மொழி(47). அருகிலுள்ள விவசாய நிலங்களில் விவசாய வேலைகள் செய்து வந்த இவர், பருத்திக்காட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை முடிந்த பின் அங்குள்ள ஏரி ஒன்றில் குளிக்க தண்ணீரில் இறங்கியுள்ளார்.
எதிர்பாராத விதமாக தேன்மொழி ஆழமான பகுதிக்குச் சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிந்துள்ளார். தேன்மொழி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் தேன்மொழியை தேடியுள்ளார்.
அப்போது ஏரிக்கரையோரம் கிடந்த தேன்மொழியின் ஆடைகளைப் பார்த்த அவர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனே அங்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் ஏரியில் இறங்கி தேடியபோது தேன்மொழி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!